உஸ்மானியா பல்கலை.யில் எம்பிஏ படிக்க விருப்பமா?

Posted By:

சென்னை: ஹைதராபாதிலுள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பணியில் இருக்கும் நபர்களுக்காக தொழில்நுட்ப நிர்வாகத்தில் 2 ஆண்டு எம்பிஏ படிப்பாக இது.

உஸ்மானியா பல்கலை.யில்  எம்பிஏ படிக்க விருப்பமா?

இதுதவிர 3 வருட பகுதி நேர எம்பிஏ படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் மாலை நேரங்களில் மட்டும் நடைபெறும்.

இந்த படிப்பில் சேர விரும்புவோர் இளநிலை பட்டப்படிப்பை உஸ்மேனியா பல்கலைக்கழகத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ முடித்திருக்கவேண்டும்.

மேலும் வேலை பார்த்து வரும் நபர்கள், 2 வருடங்களுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் நுழைவுத் தேர்வு மூலம் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

உஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்கலை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.,1,200க்கு டி.டி. எடுத்து "The Director, Directorate of Admissions, O.U., Hyderabad " என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். டி.டி.யை, The Director, Directorate of Admissions, O.U., Hyderabad " என்ற பெயரில் எடுக்கவேண்டும்.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 28 ஆகும். நுழைவுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.osmania.ac.in/-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Osmania University (OU), Hyderabad has invited applications for admission to 2 years Masters of Business Administration (MBA) in Technology Management for working executives and 3 years part time MBA evening programmes. Admissions are offered for the year 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia