ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் யுஜி படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்புக் கல்லூரிகளில் யுஜி படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.ஏ., பி.காம், பி.எஸ்சி, பிபிஏ, பிசிஏ, பிபிஎம், பிஎஸ்டபிள்யூ உள்ளிட்ட படிப்புகள் படிக்கலாம்.

பிளஸ் 2 படித்தவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகள் படிக்க ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.100 பதிவுக் கட்டணமாக இதற்குப் பெறப்படும். இதை கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் செலுத்த ஜூன் 6-ம் தேதிக்குள் விணணப்பிக்கலாம். அபராதத்துடன் விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 8 கடைசி தேதியாகும். இதற்கு அபராதம் ரூ.500 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு http://www.osmania.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். இமெயில் மூலம் தொடர்புகொள்ள [email protected] என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications

