ஆன்-லைன் படிப்புகளால் இந்திய மாணவர்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்

Posted By:

சென்னை: ஆன்-லைன் படிப்புகளால் இந்திய மாணவர்கள் அதிகம் பேர் பயன்பெறுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்-லைன் படிப்புகள் அதிக அளவில் பிரபலமாகி வருகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இந்தபடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆன்-லைன் படிப்புகளால் இந்திய மாணவர்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்

இந்த ஆன்-லைன் படிப்புகளால் அதிகம் பயன்பெறுவது இந்திய மாணவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.

இதுசம்பந்தமாக 51,954 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் அதிக அளவில் ஆன்-லைன் படிப்புகளை படிப்பது இந்திய மாணவர்கள் என்றும் உலக அளவில் ஆன்-லைன் படிப்புகளை சிறப்பாக பயில்வதும் இந்திய மாணவர்களே என்றும் தெரியவந்துள்ளது.

82 சதவீத இந்திய மாணவர்கள் சிறப்பான முறையில் ஆன்-லைன் கல்வியைப் பயில்வது தெரியவந்துள்ளது. தங்களது வேலையை செம்மைப்படுத்திக் கொள்வதற்காகவும், கல்வியறிவை வளர்த்துக் கொள்ளவும் இந்தியர்கள் ஆன்-லைன் கல்வியைப் பயில்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary
According to a recent survey, data has come up which showcases how the online courses have impacted the Indian education system positively. The survey named "learning outcomes" reveals that the Indians have scored better outcomes than global average. According to a report published by The Times of India, Massive Open Online Courses (MOOCs) that have hit the education sector four years ago have had an essential impact on education and learning. Initially, questions were being raised on the worth of MOOC certification and evaluation process. A survey conducted by Coursera and researchers at the Universities of Pennsylvania and Washington answers some of the questions.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia