அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்துவது குறித்த முக்கிய முடிவினை உயர் கல்வித்துறை எடுத்துள்ளது.
தமிழகத்தில் சுயநிதி பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது தனியார் கல்லூரிகளைப் போலவே அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியாக நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக திருச்சி, மதுரை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
For Quick Alerts
For Daily Alerts