இணைய வழி சான்று சேமிப்பு மையம்: தொடங்கியது தொழிலாளர் அமைச்சகம்

Posted By:

சென்னை: வேலை தேடுவோர் பயன் பெறும் வகையில் இணைய வழி சான்றிதழ் சேமிப்பு மையத்தை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தொடங்கியுள்ளது.

வேலை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை இந்த மையத்திலிருந்து பெற முடியும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இணைய வழி சான்று சேமிப்பு மையம்: தொடங்கியது தொழிலாளர் அமைச்சகம்

கடந்த 2011ல் டில்லி பல்கலைக் கழகத்தில் போலி சான்றிதழ் வழங்கப்பட்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல 2012ல் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் அதே போன்ற பிரச்னைகளை சந்தித்தன. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பயன்களை பெற பலர் போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஒரு ஆய்வு நிறுவனம் வெ ளியிட்ட அறிக்கையில் கல்வி தொடர்பான பிர்னைகளில் 66 சதவீதம் பிரச்னைகள் போலி சான்றிதழ் பிரச்னைகள்தான் என்று தெரிவித்துள்ளது. இது போன்ற போலி சான்றிதழ் பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவும், நல்ல பயிற்சி பெற்ற நபர்களை வேலை வழங்கும் நிறுவனங்கள் தேர்வு செய்தவற்காகவும் இணைய வழி சான்றிதழ் சேமிப்பு மையத்தை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தொடங்கியுள்ளது.

தொழிலாளர் நல அமைச்சகம் மூலம் நடத்தப்படும் பயிற்சிகள், பட்டம் பெறும் மாணவர்களின் விவரங்கள் இந்த இணைய வழி மையத்தில் சேமிக்கப்படும். அதைக் கொண்டு வேலை தரும் நிறுவனங்கள் தேவையான விவரங்களை நேரடியாகவே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மையத்தில் இந்தியாவில் உள்ள 11 ஆயிரம் தொழில் பயிற்சி நிறுவனங்கள், இதர கல்வி மையங்களில் தொழில் கல்வி பயிற்சி பெறும் 20 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெறுவார்கள்.

English summary
The Labour Department has launched online certificate saving center to help job seekers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia