திட்ட விஞ்ஞானி வேலை வேணுமா? அழைக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்!!

Posted By:

சென்னை: புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மையத்தில் நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பி, சி மற்றும் டி பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது ஆராய்ச்சி மையம்.

திட்ட விஞ்ஞானி வேலை வேணுமா? அழைக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்!!

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களுக்காக விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு பிரிவுகளுக்கேற்ப ஊதியத்தை ஆராய்ச்சி மையம் வழங்குகிறது.

வானிலை, மாறி வரும் சீதோஷ்ண நிலை, நீர்நிலை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான திட்ட விஞ்ஞானிகளை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தேர்வு செய்து பணியில் அமர்த்த உள்ளது. மொத்தம் 35 விஞ்ஞானிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடலாய்வு, விவசாயம், கணினி, வானிலை, ஜியோபிசிக்ஸ், கணிதம், இயற்பியல், புள்ளியியல் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்தத் திட்ட விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயதுவரம்பு: பி பிரிவுக்கு 28க்குள்ளும், சி பிரிவுக்கு 40க்குள்ளும், டி பிரிவுக்கும் 50க்குளும் இருக்க வேண்டும்.இந்தத் திட்ட விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.imd.gov.in/doc/Ad.pdf என்ற இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம்.

English summary
Online applications are invited for the positions available in India Meteorological Department for engaging Project Scientist, “B”, Project Scientists “C” & Project Scientists “D”
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia