இணைப்புப் பல்கலை.களில் ஆன்-லைன் சேர்க்கை முறை அவசியம்: யுஜிசி

Posted By:

சென்னை: இணைப்புப் பல்கலைக்கழகங்களில் ஆன்-லைன் சேர்க்கை முறை அவசியம் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவுடன் இணைப்பில் இருக்கும் அத்தனை பல்கலைக்கழகங்களும் இந்த ஆன்-லைன் சேர்க்கை முறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

2016 கல்வியாண்டு முதல் இதை இணைப்புப் பல்கலைக்கழகங்கள், தங்களது உறுப்புக் கல்லூரிகளில் செயல்படுத்தவேண்டும் என்று யுஜிசி அரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை யுஜிசி தலைவர் வேத் பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கல்லூரிகளில் சேர்க்கை முறையானது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றார் அவர்.

கல்லூரிகளில் ஆன்-லைன் சேர்க்கை முறையைை பகுதி முறையில் அமல்படுத்தும் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டில் முழுமையான முறையில் ஆன்-லைன் சேர்க்கையை அமல்படுத்தவேண்டும் என்றார் அவர்.

English summary
All the universities affiliated to the University Grants Commission (UGC) have been issued instructions to put into place, 'Online Admission System' for all the programmes offered by them. According to PTI reports, the institutes are now working on the summative evaluation for the current academic session. Preparations for the next academic session commencing from June-July, 2016 will soon be done by the colleges.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia