ஓன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பயிற்சிப் பணி

Posted By:

சென்னை : இந்தியா முழுவதும் உள்ள ஓன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சிப் பணிகளுக்காக உள்ள 721 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஓன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பயிற்சிப் பணி

வேலை - கிரஜீவேட் டிரெய்னி

கல்வித்தகுதி - பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்.சி

காலியிடங்கள் - 721

சம்பளம் - ரூ. 24,900 - 50,500/ மாதம்

பணிஇடம் - இந்தியா முழுவதும்

விரிவான தகவல்கள் .

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்.சி போன்ற பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

2017ம் ஆண்டு கேட் தேர்வு எழுதியவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கேட் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்ணிற்கு - 60 மார்க், நேர்முகத்தேர்விற்கு 15 மார்க், கல்வித் தகுதிக்கு 25 மார்க் ஆக மொத்தம் 100 மார்க் (கல்வித் தகுதிக்கு 20 மார்க்கும் உயர்கல்வித்தகுதிக்கு 5 மார்க்கும் வழங்கப்படுகிறது) இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விருப்பமும் தகுதியுள்ளவர்கள் 27 ஏப்ரல் 2017ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இரவு 12 மணி வரையிலும் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். மே 7 முதல் 14ம் தேதி வரை நேர்க்காணலுக்கான அழைப்புக்கடிதத்தினை இணையதளம் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு மே 23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு www.ongcindia.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
ONGC Recruitment notification released for the post of Graduate Trainee.Interested and eligible candidates apply this position in online latest 27 April 2017 till 1200 hrs.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia