ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமா?

Posted By:

சென்னை: ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(ஓஎன்ஜிசி) சுகாதார நல உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் சுகாதார நல உதவியாளர், டெக்னீஷியன், பார்மசிஸ்ட், நர்ஸ் ள்ளிட்ட பணியிட்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வுக்கு டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் வரவேண்டும்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமா?

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் எழுத்துத் தேர்வு, வாக் இன் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவேண்டும். இந்தத் தேர்வு நாஜிரா பகுதி ஓஎன்ஜிசி காலனியிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு ஓஎன்ஜிசியின் இணையதளமான http://www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/home-ல் காணலாம்.

ஓஎன்ஜிசி நிறுவனமானது உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைத் தலைமையமாகக் கொண்டு அமைந்துள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாகும் இது.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia