சென்னை: மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களின் கல்வியறிவைப் பெருக்கவும் துபாயில் மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. சுமார் 15 லட்சம் நூல்கள் அந்த நூலகத்தில் இடம்பெறும்.
அரபு நாடுகளிலேயே மிகப்பெரிய நூலகமாக இது இருக்கும்.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களில் ஒருவரான ஷேக் முகமது பின் ரஷீத் கூறியதாவது:

இந்த நூலகமானது அடுத்த ஆண்டு இறுதியில் தயாராகிவிடும். அரபு நாடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய நூலகமாக இருக்கும். சுமார் 15 லட்சம் புத்தகங்கள் இதில் இடம்பெறும். மேலும் 10லட்சம் ஆடியோ புத்தகங்களும், 20 லட்சம் இ-புத்தகங்களும் இதில் இடம்பெறும்.
உலகிலேயே அதிக அளவு எலக்ட்ரானிக் புத்தகங்களைக் கொண்ட நூலகமாக இது இருக்கும்.
குழந்தைப் பருவம் முதல் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த இதுபோன்ற நூலகத்தைக் கட்டுகிறோம். ஒரே நேரத்தில் 2,600 பேர் அமர்ந்து படிக்கும் வசதி கொண்டதாக இது இருக்கும்.
இங்கு பார்வையாளர்கள், எழுத்தாளர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வளாகங்கள் இருக்கும்.
7 மாடிகள் கொண்டதாக இது இருக்கும். 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அமைக்கப்படும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications

