மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா

Posted By:

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தயாராகும் ஓமந்தூர் மருத்துவ மணை வேலைப்பாடுகளை மும்மூரமாக செய்து வருகின்றது .

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவில் நடத்த தமிழக அரசு ஆயுத்தம்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடத்த ஒமந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மணையில் ஏற்ப்பாடுகள் நடைபெற்று வருகின்றன .தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 14 ஆம் நாள் நடத்தப்படும் என இருந்த அறிவிப்பை அடுத்த தமிழக அரசின் 85% சதவீகித ஒதுக்கீட்டை இரத்துசெய்த சென்னை நீதிமன்றம் ஒருபுறம் இருக்க மறுபுறம் நீட் தேர்வு குறித்து அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனையும் நடைபெற்று வருகிறது .

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வை நடத்துவது குறித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது . எனவே நீட் தேர்வு அடிப்படையில் தரவரிசை அமைப்பது குறித்து வேலை மும்முரமாக நடைபெறுகிறது . ஏற்கனவே தமிழக அரசின் கருத்துப்படி 85% சதவீகித ஒதுக்கீட்டின் படியும் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது .

அரசின் உத்தரவு வரும் 24 மணி நேரத்திற்க்குள் கலந்தாய்வு பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்  முடிக்க ஆயுத்தமாகி சென்னை ஒமந்தூர் அரசினர் பல்நோக்கு மருத்துவமணை அதற்க்கு தயாராக இருக்கும் என ஒரு பக்கம் தகவல் கிடைக்கின்றது . மறுபக்கம் மருத்துவமணை அனுமதியை புதுபிக்க இந்த வேலைப்பாடுகள் நடக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் எது எப்படியோ மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அரசு சரியான திட்டமிடும்  என  நம்பபடுகிறது . 

சார்ந்த பதிவுகள் :

சித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,!

மெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன 

English summary
here article tell about medical counselling news for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia