டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஜூன் 24 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.!

Posted By:

திருச்செந்தூர் : திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்த்னார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜூன் 24ந் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் அனைவரும் பல கனவுகளுடன் இருப்பர். பள்ளிக் கல்லூரி நினைவுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத மலரும் நினைவுகள் ஆகும்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஜூன் 24 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாம் பல வருடம் கழித்து நம்முடன் படித்தவர்களைப் பார்க்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. திருச்செந்தூரில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகத்தின் சார்பாக, கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 14வது சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரியில் வருகிற 24ந் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்குகிறார். ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் டி. வெங்கட்ராமராஜ், செயலாளர் டாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

முன்பதிவு செய்ய வேண்டும்

1999ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் alumni@drsacoe.org என்ற மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 23ந் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை கல்லூரியின் பயின்றோர் கழகத்தின் தலைவர் ஜோ. ஜோஷ்வா பாபு மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. வைஸ்லின் ஜிஜி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

English summary
Above mentioned article about Old Students Meeting June 24 in tiruchendur sivanthi aditanar Engineering college.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia