விரைவில் நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள்!

Posted By:

சென்னை: நர்சிங் டிப்ளமோ படிப்புக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் டிப்ளமோ படிப்பு படித்து வரும் மூன்றாமாண்டு மாணவிகன் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் பத்திரிகைகளில் வெளியாயின.

விரைவில் நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள்!

மூன்றாமாண்டு தேர்வு முடிவுகளை வெளியாடமலேயே மாணவிகள் நான்காம் ஆண்டுக்கான செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

இதைத் தொடர்ந்து நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள் தாமதமாவது ஏன் என்று தமிழ்நாடு நர்சிங் போர்டு உறுப்பினர்களிடம், மருத்துவக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்ததாவது:

மூன்றாமாண்டு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நர்சிங் போர்டு உறுப்பினர்களை அழைத்து அவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும் என்றார் அவர்.

English summary
Nursing diploma courses third year exam results will be announced soon, Tamilnadu Medical education director Dr. S. Geethalakshmi said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia