புதுமை செய்யும் என்டிஆர் பல்கலை.: பி.ஜி. மருத்துவப் படிப்புகளுக்கு வெப்-கவுன்சிலிங்!!

டெல்லி: ஆந்திர மாநிலத்திலுள்ள டாக்டர் என்டிஆர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்ஸஸ் (என்டிஆர்யுஎச்எஸ்) பல்கலைக்கழகத்தில் பி.ஜி. மருத்துவப் படிப்புகளுக்கு வெப்-கவுன்சிலிங் மூலம் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்புகள், பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் ஆகிய இரண்டுக்குமே வெப்-கவுன்சிலிங்கை நடத்தவுள்ளது டாக்டர் என்டிஆர் பல்கலைக்கழகம்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி. அனுராதா கூறியதாவது:

இந்த வெப்-கவுன்சிலிங்கின்போது மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கும் நடைமுறையானது பிஜி டிகிரி படிப்புகளுக்கு ஏப்ரல் 22 முதல் 24 வரையும், பிஜி டிப்ளமோ படிப்புகளுக்கு ஏப்ரல் 24 முதல் 26 வரையும் நடைபெறும்.

இதற்காக மாநிலம் முழுவதும் ஹெல்ப்லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், திருப்பதி, ஹைதராபாத், விஜயவாடா நகரங்களில் ஹெல்ப்லைன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா மாநில மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். வெப்-கவுன்சிலிங்கின்போது தேர்வு பெற்ற மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மே 2-ம் தேதி சென்று சேர்ந்துகொள்ளலாம்.

ஆந்திர மாநிலத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,587 பிஜி மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Online web counselling for admissions to PG (degree and diploma) medical courses in Andhra Pradesh and Telangana State, will be conducted after the certificate verification of eligible candidates. Certification verification is scheduled to be held from April 22 to 24 and April 24 to 26 respectively, said university registrar G Anuradha. Dr NTR University of Health Sciences (NTRUHS) will beconducting the web counselling.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X