சென்னை: தேசிய அனல் மின் கழகத்தில்(என்டிபிசி) பட்டதாரி என்ஜினீயர்களுக்கு பதவிகள் காத்திருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் 2016-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
தேசிய அனல் மின் கழகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒந்றாகும். மத்திய மின்சக்தித்துறையின் கீழ் இயங்கி வரும் நிறுவனமாகும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய அனல் மின்நிலையங்களை அமைத்து வருகிறது.

தற்போது எலக்ட்ரிக்கல் பிரிவில் வேலை செய்ய பட்டதாரி என்ஜினீயர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தேசிய அனல் மின் கழகம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பி.இ. பட்டதாரிகள் முயற்சி செய்யலாம்.
இந்த விண்ணப்பங்களை அனுப்பும் பட்டதாரிகளின் வயது 27-க்குள் இருக்கவேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு. விண்ணப்பக் கட்டணமாக ரூு.150 வசூலிக்கப்படும்.
விண்ணப்பங்களை என்டிபிசி இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் ஜனவரி 29-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.ntpccareers.net என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












