மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி...நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!!

மாணவச் செல்வங்கள், இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு மார்ச் 20-ம் தேதி வரை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) வாய்ப்பு வழங்கியுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு [email protected] என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வானது கட்டாயம் என மாற்றப்பட்டுள்ளது.

தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-25 கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி...நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!!

இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மார்ச் 20-ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

இவ்வாறு என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Testing Agency (NTA) has announced the release date of the NEET UG 2024 Application correction window. According to the official notice, the correction window will open on March 18. The last date for making corrections is March 20, up to 11:50 pm
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+