என்எஸ்டிஎல் நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளராக வாய்ப்பு!!

Posted By:

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள நேவல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிக்கல் லெபாரட்டரியில் (என்எஸ்டிஎல் நிறுவனம்) இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விளம்பரம் வெளியான அக்டோபர் 3-ம் தேதியிலிருந்து 21 நாள்களுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் இளநிலை ஆராய்ச்சி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக், எம்.இ., எம்.டெக் உள்ளிட் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நெட் அல்லது கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

வயது 28-க்குள் இருக்வேண்டும்.

நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு என்எஸ்டிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://drdo.gov.in/drdo/labs/NSTL/English/index.jsp?pg=homebody.jsp -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Naval Science and Technological Laboratory (NSTL), Visakhapatnam Job Notification: Naval Science and Technological Laboratory (NSTL), Visakhapatnam invited applications for recruitment to the post of Junior Research fellow at Visakhapatnam and Goa. The candidates eligible for the post can apply through prescribed format within 21 days from the date of publication of the advertisement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia