விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஊக்கத்தொகையுடன் புதுதில்லியில் நாடகப் படிப்பு!

புதுதில்லியை மையமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் பண்பாடு மற்றும் கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா கல்வி நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான

By Kani

புதுதில்லியை மையமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் பண்பாடு மற்றும் கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா கல்வி நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வழியாக பயிற்றுவிக்கப்பட உள்ள இப்படிப்பிற்கு ஜூலை 16 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதில் நடிப்பு, வடிவமைப்பு, இயக்கம் மற்றும் இவை தொடர்பான கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது மொழி அறிவுடன் குறைந்தது ஆறு மாதம் தியேட்டர் புரொடக்சனில் பணி அனுபவம் வேண்டும்.

வயதுவரம்பு: 18- 30க்குள். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகை உண்டு.

தேர்வு செய்யும் முறை: இரண்டு கட்ட தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு 12 தேர்வு மையங்களில் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. சென்னையில் வரும் 22.05.2018 அன்று தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 26 முதல் 30 வரை தில்லி நாடகப் பள்ளியில் பயிற்சிப் பட்டறைக்கு (ஓர்க் ஷாப்) அழைக்கப்படுவார்கள்.

இதற்கான போக்குவரத்துக் கட்டணம், இடவசதி மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவச் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் வலைத்தளத்தில் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்பிற்கு மூன்று முறைகளில் விண்ணப்பிக்கலாம்.

முதல் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் வாயிலாக 16.04.2018 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.50.

இரண்டாம் முறை: நாடகப்பள்ளியின் இணையதள லிங்க் இதன் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்துடன், ''The Director, National School of Drama, New Delhi'' என்றவாறு ரூ.150-க்கும் டிமாண்ட் டிராஃப்ட் (DD) எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மேல் ''Application for Admission 2018-21'' என்று குறிப்பிட வேண்டும்.

மூன்றாம் முறை: நாடகப் பள்ளியின் புத்தக விற்பனை மையத்தில் ரூ.150-க்கு விண்ணப்பத்தை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2018.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NSD Admission 2018 For Diploma Course In Dramatic Arts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+