தமிழகத்தில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த 46 அரசு தொடக்கப் பள்ளிகள் தற்போது நூலகங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் இன்றி இருந்த அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், பள்ளிகளை மூடாமல், அங்கு நூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் நூலகம் அமைக்க அரசு உத்தரவு வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நூலகத் துறையால் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.


Click it and Unblock the Notifications












