விளையாட்டு வீரர்களுக்கு வடமேற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Posted By:

சென்னை: விளையாட்டு வீரர்களுக்காக வேலைவாய்ப்பை வழங்கவிருக்கிறது வடமேற்கு ரயில்வே மண்டலம்.

நாட்டிலுள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் இப்போது விளையாட்டு வீரர்களை நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் குரூப் சி, குரூப் டி பிரிவில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வீரர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கு வடமேற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

தகுதியான வீரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 54 இடங்கள் காலியாகவுள்ளன.

வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. வில்வித்தை வீரர்கள் - 02
2. தடகள வீரர்கள் - 10
3. குத்துச்சண்டை வீரர்கள் - 03
4. கபடி வீரர்கள் - 02
5. வலுதூக்கும் வீரர்கள் - 04
6. துப்பாக்கிச்சுடும் வீரர்கள் - 01
7. வாலிபால் வீரர்கள் - 05
8. மல்யுத்த வீரர்கள் - 04

மேற்கண்ட விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் 2, பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

01.07.2015 தேதியின்படி விண்ணப்பிப்போர் 18 - 25க்குள் இருக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொதுப்பிரிவினருக்கு ரூ.100- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nwr.indianrailways.gov.in என்ற வடமேற்கு ரயில்வே மண்டலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 20-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nwr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Northwest Railway has to recruit sports persons in Group C and D. For more details sports persons can search www.nwr.indianrailways.gov.in site.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia