எல்.எல்.எம் படிக்க நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலை. அழைக்கிறது!!

Posted By:

சென்னை: சட்டப்படிப்பு படிக்க(எல்.எல்.எம்) மேகாலய மாநிலம் ஷில்லாங்கிலுள்ள நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகம் (என்.இ.எச்.யு) மாணவ, மாணவிகளை அழைக்கிறது.

நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் புதிதாக மாஸ்டர் ஆஃப் லா(எல்.எல்.எம்) படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கவுள்ளது பல்கலைக்கழகம்.

எல்.எல்.எம் படிக்க நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலை. அழைக்கிறது!!

இந்தப் படிப்பு பயில பொதுப் பிரிவு மாணவர்கள் எல்.எல்.பி படிப்பு அல்லது அதற்கான ஈடான படிப்புகளில் 55 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் எல்.எல்.பி அல்லது அதற்கான ஈடான படிப்புகளில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இந்தப் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கலைப் பெறலாம். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.600 கட்டணம் ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆன்-லைனில் பணத்தைச் செலுத்திவிட்டு அதற்கான இ-சலானை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கலை Head of Departments, NEHU, Permanent Campus, Mawkynroh-Umshing, Shillong-793022 or NEHU, Tura Campus, Chandmari, Tura - 794002 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 10 கடைசி நாளாகும். ஆகஸ்ட் 18-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.nehu.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
North-Eastern Hill University (NEHU), Shillong has invited applications for admission to Master of Law (LL.M) programme. Admissions are offered for the academic session 2015. Eligibility Criteria: Candidates must have minimum of 55% (for general candidates) and 50% (for SC/ST) in LL.B or equivalent examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia