நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆசையா....!!

Posted By:

ஷில்லாங்: ஷில்லாங் நகரிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் (என்இஎச்யு) எம்பிஏ படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்ரி-பிசினஸ் மற்றும் புட் டெக்னாலஜி பிரிவுகளில் இந்த எம்பிஏ படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பி.எஸ்சி படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். விவசாய அறிவியல், டெக்னாலஜி, கால்நடை அறிவியல் உள்ளிட்ட எந்தப் பிரிவிலும் பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆசையா....!!

விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்யலாம். இந்த விண்ணப்பத்துக்கு கட்டணமாக ரூ.600 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்தினால் போதும்.

விண்ணப்பத் தொகையை ஆன்-லைனில் செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Heads of respective Departments NEHU, Permanent Campus, Mawkynroh-Umshing, Shillong-793022 or NEHU, Tura Campus, Chandmari, Tura - 794002 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.nehu.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by North-Eastern Hill University (NEHU), Shillong for admission to 2 years Master of Business Administration (MBA) programme in Agri-Business & Food Technology for the academic session 2016. Eligibility Criteria: Candidate who have secured 55% marks (relaxable up to 5% for SC/ST candidates) in the aggregate in B.Sc (Life Sciences, Zoology, Botany, Chemistry, Applied Chemistry, Micro-biology, Bio-chemistry, Food Preservation, Agriculture, Food Technology) or any graduate in Agriculture Science/Technology/ Animal Husbandry are eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia