தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கப்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் சமீப காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இதனைக் காரணம் காட்டி சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் போதிய தண்ணீர் அற்ற தனியார் பள்ளிகளை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தண்ணீர் பிரச்சனையைக் காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கப்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தண்ணீர் வசதியை உறுதி செய்த பிறகே தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும், தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்து தனியார் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












