தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் நோட்டீசுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.
பின்னர் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












