டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா!

Posted By:

சென்னை : பொதுத் தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் மாணவ மாணவியர்கள் மிகவும் பரபரப்பாக உள்ளனர், மாணவர்களே நீங்கள் உங்கள் டென்சனை சற்றுக் குறைத்துக் கொண்டு ரிலேக்சாக இருக்க வேண்டும் என்பதற்காக சில குட்டி குட்டி ஜோக்ஸ் உங்களுக்காக. படித்து சிரிங்க, ரிலாக்சா இருங்க.

ஆசிரியர் - (புவியியல் வகுப்பில்) டேய் பூமி எத்தனை டிகிரி சாய்வாக சுற்றுதுடா எனக் கேட்டார்
மாணவன் - சார் டிகிரி படிச்சவங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என் கிட்ட கேட்டா எப்படி சார்.!

டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா!

ஆசிரியர் - உங்க பையன் ஆங்கிலத்தில ரொம்ப வீக்கா இருக்கான் சார்
பையனின் தந்தை - தமிழ்ல எப்படி இருக்கானு சொல்லுங்க சார்
ஆசிரியர் - தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கிறான் ஐயா.!!!

ஆசிரியர்: பொய் பேசக்கூடாது, அடுத்தவங்க பொருள் மேல ஆசை வைக்கக் கூடாது, அடுத்தவங்க மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன் - இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாதுனு சொல்லிருங்க சார்.

ஆசிரியர் - எது கேட்டாலும் தெரியாது தெரியாதுனு சொல்ற பையன் நேத்து ஒரு கேள்வி கேட்டேன் கரெக்டா சொல்லிட்டான்
மாணவன்- என்ன கேட்டீங்க சார்
ஆசிரியர் - ஆந்தைக்கு பகல்ல கண்ணு தெரியுமானு கேட்டேன் தெரியாதுனு சொல்லிட்டான்

ஆசிரியர் - நான் டெய்லி 7 கிலோமீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்
மாணவர் - அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் சார்.

ஆசிரியர் - ரேடியோவைக் கண்டுபிடிச்சவர் மார்கோனி
மாணவன் - சார் எங்க வீட்டிலயும் ஒரு ரேடியோ காணமா போய் விட்டது சார், கண்டுபிடிச்சு தருவாரா?

ஆசிரியர் - என்னடா ஒரு பக்கத்திலேயே பரீட்சை எழுதி முடிச்சுட்ட?
மாணவன் - சார் சிங்கம் சிங்கிளாதான் எழுதும் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும் சார்.

அப்பா- என்னடா பரீட்சையில 0 மார்க் வாங்கட்டு வந்துருக்க
மனக் - அது 0 இல்லப்பா நான் நல்லா படிச்சதால டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா

ஆசிரியர் - நம்ம ஒரு கல்லை தூக்கி மேல போட்ட அது ஏன் மறுபடியும் பூமியை நோக்கியே வருது
மாணவன் - நம்மல தூக்கிப் போட்டவன் தலைமேல விழலாம்னுதான்.

English summary
This is nick of the time for students. above mentioned jokes decrease your tension.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia