இரட்டை டிகிரி முறைக்கு ஆதரவு இல்லை: ஒரே போடாக போட்ட யுஜிசி

Posted By:

சென்னை: ஒரே நேரத்தில் இரட்டை டிகிரி பயிலும் முறைக்கு ஆதரவு இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அதிரடியாக அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் முறையை மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுதொடர்பாக ஆலோசித்ததில் அதற்கு பெரும்பான்மையான ஆதரவு கிட்டவில்லையென்றும், அந்தத் திட்டத்தை அனுமதிக்கும் திட்டம் இல்லை யுஜிசி அறிவித்துளள்ளது.

இரட்டை டிகிரி முறைக்கு ஆதரவு இல்லை: ஒரே போடாக போட்ட யுஜிசி

இதுகுறித்து யுஜிசி செயலர் ஜஸ்பால் எஸ். சாந்து கூறியதாவது: இரட்டைப் பட்டம் பயிலும் குறித்து குறித்து பல்வேறு கல்வி கவுன்சில்களிடம் கருத்து கேட்டோம். ஆனால் எந்த கவுன்சிலிடமிருந்தும் ஆதரவான பதில் வரவில்லை. எனவே பல்கலைக்கழகங்கள் முதலில் பட்டம், அதன்பிறகு மாஸ்டர் டிகிரி என்ற முறையையே கடைப்பிடிக்கவேண்டும். இதை ஏற்கெனவே 2003-ல் நாங்கள் அறிவித்துள்ளோம். அப்போது அறிவித்த விதிமுறைகள், நடைமுறைகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்றார் அவர்.

ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டம் பயில்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்தியபோது இதுதொடர்பாக நிபுணர் குழு ஒன்றை யுஜிசி அமைத்தது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு குழு ஆதரவு தரவில்லை. ரெகுலர் கல்லூரிகளில் பயிலும் மாணவர், தொலைநிலைக் கல்வித் திட்டத்திலோ அல்லது வேறு பல்கலைக்கழகத்திலோ பயிலலாம் என குழு பரிந்துரை செய்தது. தே நேரத்தில் ஒரே நேரத்தில் ஒரே பல்கலைக்கழகத்தில் இரட்டைப் பட்டம் பயில முடியாது என அது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    The University Grants Commission (UGC) said that its consultations related to allowing students to pursue two degrees simultaneously so far has not received a positive response. In a notice posted on its website, UGC said that it had sought the comments of statutory councils but the responses so far do not endorse the idea of allowing students to pursue two degrees simultaneously. "Therefore, the Universities shall conduct their programmes in accordance with the First Degree and Master Degree Regulations, 2003 prescribed by the UGC and also follow the norms and parameters prescribed by the Statutory Council concerned, wherever relevant," the notice signed by UGC Secretary Jaspal S Sandhu said.

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more