பிளஸ் 2 கணிதத்துக்கு மறுதேர்வு கிடையாது...! சிபிஎஸ்இ திட்டவட்டம்!!

Posted By:

டெல்லி: பிளஸ் 2 தேர்வு கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ன. இதில் மார்ச் 14-ம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது.

பிளஸ் 2 கணிதத்துக்கு மறுதேர்வு கிடையாது...! சிபிஎஸ்இ திட்டவட்டம்!!

ஆனால் தேர்வில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார்க் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இந்தப் பிரச்னை நாடாளுமன்றத்தில் எழுந்தது.

பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண்கள் அடுத்து செல்லக்கூடிய உயர்கல்விப் பிரிவுகளுக்கு உதவும் என்பதால் மாணவ, மாணவிகள் கவலை அடைந்தனர். இதனால் மறுதேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

English summary
Amid suggestions of conducting a re-examination for the Class 12 mathematics exam on May 1, 2016. The Central Board of Secondary Education (CBSE) has denied the claim of conducting a re-exam, yesterday on April 5, 2016. The board says that, the CBSE did not plan on re-conducting the examination for the Class 12 board mathematics paper.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia