நீட் தேர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை... நீங்களும் மருத்துவர் ஆகலாம்...

Posted By:

கோவை : பிசியோதெரபி மருத்தவ படிப்பு MBBS மருத்துவ படிப்பை போலவே 80% பாட திட்டத்தை உள்ளடக்கியது. நான்கரை ஆண்டுகள் படிக்கும் தனித்துவம்​ வாய்ந்த மருந்தில்லா மருத்துவ படிப்பாகும்.

வளர்ந்து வரும் காலங்களுக்கு ஏற்ப மக்கள் இப்பொழுது பக்கவிளைவுகள் இல்லாத மருந்தில்லா மருத்துவத்தை தேடி சென்று சிகிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் பக்கவிளைவுகளே இல்லாத பிசியோதெரபி மருத்துவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அலோபதி மருத்துவத்தை போலவே இதிலும் இளநிலை படிப்புக்கு பின் படிக்கக்கூடிய முதுநிலை சிறப்பு மருத்துவ படிப்புகளும் உள்ளன.

நீட் தேர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை... நீங்களும் மருத்துவர் ஆகலாம்...

இளநிலை மருத்துவ படிப்பு - BPT நான்கரை ஆண்டுகள்​

4 ஆண்டுகள் - மருத்துவ பயிற்சியுடன் கூடிய மருத்துவ படிப்பு

6 மாதங்கள் - மருத்துவர் பயிற்சி

முதுநிலை மருத்துவ படிப்பு - MPT 2 ஆண்டுகள்

தமிழகத்தில் 10 சிறப்பு பிசியோதெரபி மேற்படிப்புகள் உள்ளன.

அலோபதி மருத்துவர் படிப்பை போலவே எலும்பியல், நரம்பியல்,இருதய மற்றும் நுரையீரல், மகளிர் மற்றும் மகப்பேறு நலம், குழந்தைகள் நலம், முதியோர் நலம்,பயோமெக்கானிக்ஸ், விளையாட்டு சார்ந்த, சமுதாயம் சார்ந்த, கை சார்ந்த பிசியோதெரபி மருத்துவர் படிப்புக்கள் இதில் உள்ளன.

பிசியோதெரபி மருத்துவர் படிப்பிற்கான கல்வி தகுதி:

12 வகுப்பு அறிவியல் பாடத்தில் (இயற்பியல், வேதியியல், உயிரியல் (அ) தாவரவியல் மற்றும் விலங்கியல்) குறைந்தபட்சம் 50 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ கல்லூரிகள்:

அரசு பல்கலைக்கழகத்தின் கீழ்:

2 அரசு பிசியோதெரபி மருத்துவ கல்லூரிகள்

23 சுயநிதி பிசியோதெரபி மருத்துவ கல்லூரிகள்

நிகர்நிலை பல்கலைகழகத்தின் கீழ்:

5 சுயநிதி​ பிசியோதெரபி மருத்துவ கல்லூரிகள்

கல்வி கட்டணம்:
அரசு கல்லூரி - ஆண்டுக்கு ரூபாய்.1200
தனியார் கல்லூரி(கவுன்சிலிங் மூலமாக) - ரூ.33,000

கல்வி உதவித்தொகை:

கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கல்வி உதவித்தொகை,SC/SCA/ST மாணவர்களின் பெற்றோர் வருமானம் ரூ 2,50,000 க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் முழுகட்டணத்தையும் அரசே செலுத்தும் வசதி.

கல்விக்கடன்:

கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெரும் மாணவர்கள் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை தங்கள் அருகில் இருக்கும் வங்கிகளில் எளிதாக பெறமுடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஜுலை கடைசி வாரத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் www.tnhealth.org என்ற இணையதளமும் மூலமும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வு​:

12 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

வேலைவாய்ப்பு:

அரசு மற்றும் தனியார் மருத்துவ​மனைகளில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரியலாம், தனியாக பிசியோதெரபி மருத்துவ மையங்கள் தொடங்கலாம், மாநில மற்றும் மாவட்ட விளையாட்டு அணிகளில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரியலாம். வெளி நாடுகளில் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

ஆலோசனைகள்:

மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவ படிப்பிற்கான இலவச ஆலோசனை மையம் செயல்படுகிறது. இதில் மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பிசியோதெரபி மருத்துவர்களால் விளக்கம் அளிக்கபடுகிறது.

மருத்துவ படிப்பு பற்றி விழிப்புணர்வு கட்டுரை குறித்த மேலும் விவரங்களுக்கு:

டாக்டர்.ராஜேஸ் கண்ணா
செயலாளர்,
கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம்
7200300032

English summary
Physiotherapy Diabetes Study is a unique pharmacological medicine study of 4 1/2 years, similar to the MBBS medical course (includes 80% lesson plan).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia