மாணவர்களே ஹேப்பி நியூஸ்.. கால்நடை மருத்துவப் படிப்பிற்கு "நீட்" கிடையாது !

கால் நடை மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கிடையாது என தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப்படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவத்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்பு

கால்நடை மருத்துவப் படிப்பு

கால்நடை மருத்துவம் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர 380 இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல கலந்தாய்வு மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பம்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்பு அதனை பத்விறக்கம் செய்து அனுப்ப வேண்டும்.

நீட் தேர்வு கிடையாது

நீட் தேர்வு கிடையாது

கால்நடை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கிடையாது. 12ம் வகுப்பில் மாணவ மாணவியர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும்.

தேசிய தரவரிசைப் பட்டியல்

தேசிய தரவரிசைப் பட்டியல்

மேலும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த ஆய்வில் 1007 என்ஜீனியரிங் கல்லூரிகள், 542 மேலாண்மை கல்லூரிகள் 535 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 316 மருந்தியல் கல்வி நிறுவனங்கள், 200 பல்கலைக்கழகங்கள் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 600 கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றன,

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38வது இடத்தை பெற்றது. ஆனால் மாநில அளவில் 4 வது இடத்தை பிடித்தள்ளது. மேலும் கல்வி மற்றும் கல்வி கற்றலுக்கான சூழல்களை வழங்கிடும் விதத்தில் தேசிய அளவில் 6வது இடத்தையும், மாநில அளவில் 2 வது இடத்தையும் பிடித்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறியுள்ளார்.

தேசிய அளவில் முதல் இடம்

தேசிய அளவில் முதல் இடம்

இந்தியாவில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் 14 உள்ளன. அந்த பல்கலைக் கழககங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது எனவும் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Veterinary and Animal Sciences University Vice chancellor Doctor S. Thilagar has announced that students admission only based on 12th marks. No neet exam for Veterinary and Animal Sciences coruses.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X