இனி கிளாஸ்-3, 4 அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

Posted By:

சென்னை: இனி கிளாஸ்-3, 4 நிலையிலுள்ள அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வந்துள்ளது என்றும், இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு புத்தாண்டுப் பரிசு என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இனி கிளாஸ்-3, 4 அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

அரசுப் பணிகளில் கிளாஸ்-3, கிளாஸ்-4 பணிகளுக்கான நேரடித் தேர்வு முறைகள் ரத்து செய்யப்படுகின்றன. நாட்டில் ஊழலை ஒழிக்க இது உதவும். இது நாட்டு இளைஞர்களுக்கு புத்தாண்டுப் பரிசாகும்.

2016 இளைஞர்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும். அவர்களுக்கு எனது பரிசாக இது இருக்கும். இதன்மூலம் இளைஞர்கள் யாரையும் சாராமல் சொந்தக் காலில் நிற்க முடியும்.

திறமையின் அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் நேர்முகத் தேர்வு முறையில் இருந்த ஊழல், லஞ்சம் ஒழிக்கப்படும் என்றார் அவர்.

English summary
With effect from tomorrow, there will be no interviews for central government jobs in Class-III and IV categories, Prime Minister Narendra Modi announced today, terming it as a "New Year Gift" to the youth and a major step to curb corruption."From tomorrow, interviews for government jobs in Class-III and Class-IV categories will be abolished. This will help curb corruption," he tweeted.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia