'புதுச்சேரியில் எந்தக் கல்லூரிக்கும் நிகர்நிலை அந்தஸ்து வழங்கவில்லை'- அரசு அறிவிப்பு

Posted By:

சென்னை: புதுச்சேரியில் எந்த ஒரு தனியார் கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை மாநில அரசு வழங்கவில்லை என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுவை கல்வித்துறை செயலாளர் ராகேஷ்சந்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுவையில் செயல்படும் தனியார் கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாகவும், தனியார் பல்கலைக்கழகஙக்ளாகவும் மாற்றுவதற்கு சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

'புதுச்சேரியில் எந்தக் கல்லூரிக்கும் நிகர்நிலை அந்தஸ்து வழங்கவில்லை'- அரசு அறிவிப்பு

இது முற்றிலும் தவறானது. அமைச்சரவை கூட்டத்தில், புதுவை உயர்கல்வியில் வளர்ச்சிக்கு பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கியது. இது தொடர்பாக அரசின் வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கான வழிமுறைகளும் தற்போது வெளியிடப்படவில்லை. அரசின் உத்தரவு பெற்ற பிறகே வெளியிடப்படும்.

மேலும் புதுவையில் எந்த ஒரு தனிப்பட்ட கல்லூரி நிறுவனங்களுக்கும் தனியார் பல்கலைக்கழகமாகவோ, நிகர்நிலை பல்கலைக்கழகமாகவோ மாற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Puduchery governent has not given Deemed University Status for any colleges in the state. Puduchery state education secretary Rakeshchandra said in a press release.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia