+2 சிலபஸில் எந்த மாற்றமும் இல்லை.. பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Posted By:

சென்னை : 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால் 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதைக் குறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

1988ல் பாடத்திட்டம் மாற்றப்பட்டதற்கு பின்பு 2005ம் ஆண்டில்தான் பாடத்திட்டம் மறுபடியும் மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பின் இன்னும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை.

கல்வித்தரம்

ஒரே பாடத்திட்டத்தை படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களுக்கு மதிப்பெண்களை மட்டும்தான் வாங்கித்தரும். பாடத்திட்டங்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நடைமுறைக்கு ஏற்ப மாற்றப்பட்டால்தான் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை

ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் ஆரம்பாமாகிவிடும். பள்ளிகள் ஆரம்பமாகும் முதல் நாளில் இருந்தே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை அச்சடித்து விட்டது. எனவே பிளஸ்-2 வகுப்பு பாடத்திட்டத்தில் கட்டாயம் மாற்றம் இல்லை.

பிளஸ்-1 பாடத்திட்டம் மாற்றம் வருமா?

தற்போது 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிட்ட பிறகு 11-வது வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. எனவே பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா என மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

புதிய பாடத்திட்டம்

பிளஸ்-1 வகுப்புகள் தொடங்க இன்னும் 2½ மாதங்களே உள்ளன. இந்நிலையில் அவசர அவசரமாக வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றுவது கடினமான ஒன்று. ஆனாலும் இதைப்பற்றி அரசு தான் இறுதி முடிவை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு, அந்த மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் போது புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானம் அப்படியே இருக்கிறது. எனவே 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்னர்.

தமிழக அரசின் கடமை

நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களுக்காக என்.சி.ஆர்.டி என்று கூறப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடப்புத்தகங்களை வெளியிடுகிறது. அப்படி வெளியிடப்படும் பாடப்புத்தகங்களில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தினை தமிழில் மொழிப்பெயர்து புதியப் பாடத்திட்டத்தினை 11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கு கொண்டு வரும் போதுதான் நீட் தேர்வில் தமிழக மாணவர்களால் கலந்து கொண்டு அதிகம் மார்க்குகளைப் பெறமுடியும். தமிழ் நாட்டு மாணவ மாணவியர்களுக்கு தரமான கல்வியைத் தருவது தமிழக அரசின் கடமையாகும்.

English summary
After nearly 10 years, the State government has revised the Class XI syllabus, which is expected to roll out for the academic year 2017-18. The new syllabus, sources say, will help bridge the gap between school and college education.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia