மொழித் தேர்வில் நோ சென்டம்... மற்றப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல்...!

மற்றப்பாடங்களில் மாணவ மாணவியர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆனால் மொழித் தேர்வில் யாருமே முழு மதிப்பெண்களை எடுக்கவில்லை.

சென்னை: ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 3,656 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் வெறும் 4 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

என்ஜீனியரிங் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு தேவையான பாடங்களான வேதியியல் பாடத்தில் 1123 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொழித் தேர்வில் நோ சென்டம்... மற்றப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல்...!

இயற்பியல் பாடத்தில் 187 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

உயிரியல் பாடத்தில் 221 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் 22 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

விலங்கியல் பாடத்தில் 4 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணிதத்தில் 3656 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிகவியலில் 8301 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வரலாறு பாடத்தில் 336 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கணக்குப் பதிவியல் பாடத்தில் 5597 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துளளனர்.

பொருளியல் பாடத்தில் 1717 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

புள்ளியியல் பாடத்தில் 68 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1647 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

மொத்தத்தில் 1200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 330 பேர் 1180 மதிப்பெண்கள் மேல் பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மொத்தம் 86.87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1180க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஏ கிரேடும், 1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடும், 1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடும், 1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு டி கிரேடும், 1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இ கிரேடும் வழங்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Plus-2 exam results released at 10 am this morning. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in Go to websites and check out the results.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+