மங்களூர் துறைமுகத்தில் மேலாளர் வேலை காத்திருக்கு!!

Posted By:

சென்னை: புதிய மங்களூர் துறைமுகத்தில்(என்எம்பிடி) தலைமை மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் பணியிடங்கள் காலியாகவுளள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மங்களூர் துறைமுகத்தில் மேலாளர் வேலை காத்திருக்கு!!

தலைமை மேலாளர் பணியிடங்கள் 4-க்கும், மூத்த மேலாளர் பணியிடங்கள் 2-ம், மேலாளர் பணியிடங்கள் 7-ம் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு மார்க்கெட்டிங், மாஸ் கம்யூனிகேஷன், பப்ளிக் ரிலேஷன்ஸ், கமப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்கவேண்டும். இல்லாவிட்டால் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு 55 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் the Secretary, New Mangalore Port Trust, Panambur, Mangalore -575 010 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500-ஐ கேட்புக் காசோலையாக செலுத்தவேண்டும்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia