என்எம்டிஎஃப்சி கழகத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!!

Posted By:

சென்னை: நேஷனல் மைனாரிட்டீஸ் டெவலப்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷனில் (என்எம்டிஎஃப்சி) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாகவுள்ள அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 16-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

என்எம்டிஎஃப்சி கழகத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!!

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், போட்டோகாப்பியர் ஆப்பரேட்டர், மெசஞ்சர், உள்லிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக அனுப்பவேண்டும். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்கள்குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் குறித்த விவரம் என்எம்டிஎஃப்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேஷனல் மைனாரிட்டீஸ் டெவலப்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷன் 1994-ல் நிறுவப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இந்த கழகம் இயங்கி வருகிறது. இது ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு சலுகையில் நிதியுதவி வழங்குவதுதான் இந்த கழகத்தின் நோக்கமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு என்எம்டிஎஃப்சி-யின் இணையதளமான http://nmdfc.org-ல் காணலாம்.

English summary
National Minorities Development & Finance Corporation (NMDFC) invited applications for 04 Jr. Executive & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 16 February 2016 (01 month from the date of publication of advertisement).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia