எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு கால அவகாசம்

நாட்டிலுள்ள மருத்துவ கல்லூரிகள் தாங்கள் வழங்கும் எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க வரும் ஏப்ரல் 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.nmc.org.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எம்பிபிஎஸ் படிப்பை தொடங்குவதற்கான அனுமதியை பெற்ற மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் ஆகும். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும், அந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு கால அவகாசம்

சான்றுகளை பதிவேற்றம் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அந்தக் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான அவகாசத்தை என்எம்சி வழங்கியிலிருந்தது. இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு கால அவகாசம் ஏப்ரல் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Medical Commission (NMC) extended the deadline to update recognition of the Medical colleges by April 10. For more details please login into https://www.nmc.org.in/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+