நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மேலாளர் வேலை!

Posted By:

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

நிறுவனத்தில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், கூடுதல் முதன்மை மேலாளர், கூடுதல் துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது நெய்வேலி நிலக்கரி வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மேலாளர் வேலை!

மைனிங் பிரிவில் கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரைனி, துணைப் பொது மேலாளர், கம்ப்யூட்டர் பிரிவில் பொது மேலாளர், கூடுதல் முதன்மை மேலாளர், துணை முதன்மை மேலாளர், மேலாளர், நிதிப் பிரிவில் துணைப் பொது மேலாளர், துணை முதன்மை மேலாளர், மருத்துவப் பிரிவில் துணை மருத்துவ அதிகாரி, துணை முதன்மை மருத்துவ அதிகாரி, சட்டப் பிரிவில் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.300-ஐ ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

www.nlcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமை செய்யப்பட்ட விண்ணப்பங்களை

THE GENERAL MANAGER (HR),

RECRUITMENT CELL,

HUMAN RESOURCE DEPARTMENT,

CORPORATE OFFICE, NEYVELI LIGNITE CORPORATION LIMITED,

BLOCK -1, NEYVELI - 607801, TAMILNADU...என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி வரும் செப்டம்பர் 1-ம் தேதியாகும்.

மேலும் முழுமையான விவரங்கள் பெற http://nlcindia.com/careers/advt_no_05_2015.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Neyveli Lignite Corporation Limited (NLC), a premier ‘NAVRATNA' Public Sector Enterprise with a present Annual Turnover of INR.6087 Crores (approx.) is spreading its wings in the frontiers of Mining and Power generation. The Corporate plan of the company has many ambitious expansion schemes for massivecapacity augmentation in the years to come. NLC will recruit Manager, Dy. Managers for Various Departments.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia