ஐஐடி வழியைப் பின்பற்றும் என்ஐடி!!

Posted By:

சென்னை: பி.டெக் படிப்பில் பிளஸ் 2 மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஐஐடி உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்று வழியை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(என்ஐடி) நிறுவனங்களும் பின்பற்றவுள்ளன.

இதுகுறித்து என்ஐடி இயக்குநர் அனைத்து என்ஐடி உயர்கல்வி நிறுவனங்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதன் விவரம்;

தற்போது ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் பிளஸ்2 படிப்பில் வாங்கிய மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.

ஐஐடி வழியைப் பின்பற்றும் என்ஐடி!!

மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதுகின்றனர். இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு 2 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகின்றனர்.

அவர்கள் பிளஸ்-2 படிப்பில் வாங்கிய மதிப்பெண்கள், பி.டெக் படிப்பில் சேர்க்கப்படும்போது கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

ஆனால் என்ஐடி-யில் முன்பு மாணவர்கள் சேர்க்கப்படும்போது அவர்களது பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது அதை நீக்க முடிவு செய்துள்ளோம். ஐஐடி நிறுவனங்கள் பின்பற்றுவதைப் போலவே என்ஐடி-களும் ஜேஇஇ தேர்வு முறையையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

English summary
The National Institutes of Technology may no longer give weightage to Class XII board marks while admitting BTech students from next year if the institutions and the government have their way.An NIT director said the institutes, along with other centrally funded technical institutions (CFTIs) like the Indian Institutes of Information Technology (IIITs), were more likely to admit students on the basis of their JEE Advanced score - like the IITs do.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia