ஸ்ரீநகர் என்ஐடி-யில் பிஎச்.டி. சேர்க்கை அறிவிப்பு!

Posted By:

சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஸ்ரீநகர் என்ஐடி-யில் பிஎச்.டி படிப்பு(என்ஜினீயரிங்) படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் பிரிவுகளில் பிஎச்.டி. படிப்புகள் இந்த என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பயில முடியும்.

ஸ்ரீநகர் என்ஐடி-யில் பிஎச்.டி. சேர்க்கை அறிவிப்பு!

மேலும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் ஐடி பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகளை இங்கு பயில முடியும். இந்தப் படிப்புகள் 2016-ம் ஆண்டில் தொடங்கவுள்ளன. இந்தப் படிப்புகளைப் பயில விரும்புபவர்கள் பி.இ., பி.டெக் படிப்புகளை படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் 60 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண்களை பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை என்ஐடி இணையதளத்துக்குச் சென்று டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்பீட்போஸ்ட் மூலம் Head, Department of Electronics & Communication Engineering, National Institute of Technology Hazratbal Srinagar 190 006 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400-ஐ கேட்புக் காசோலையாக செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.200 செலுத்தினால் போதும். கேட்புக் காசோலையை f "DIRECTOR NIT SRINAGAR" என்ற பெயரில் எடுக்கவேண்டும். மாணவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதியாகும். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களை என்ஐடி இணையதளமான http://www.nitsri.net/-ல் காணலாம்.

English summary
National Institute of Technology (NIT), Srinagar has invited applications for admissions into Doctor of Philosophy (Ph.D) programmes. Admissions are offered in the departments of Electronics & Communication Engineering and Computer Science and Engineering in the research area of Analog VLSI Design and Digital VLSI Design respectively, under the Visvesvaraya Ph.D Scheme for Electronics & IT for the session 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia