சூரத்கல் என்ஐடி-யில் பேராசிரியர் வேலை!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகிலுள்ள சூரத்கல்லில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மேலும் இங்கு ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பணியிட வாய்ப்பு முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர், உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

அதேபோல டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், டெக்னீஷியன், லெபாரட்டரி அசிஸ்டெண்ட், ஒர்க் அசிஸ்டெட்(குரூப் சி) ஆகிய பணியிடங்களும் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அக்டோபர் 1-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சூரத் என்ஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.nitk.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
National Institute of Technology Karnataka, Surathkal invited applications from Indian Nationals for various Teaching and Non Teaching positions under a ‘Special Recruitment Drive' for Persons with Disability (PWD). The eligible candidates can apply to the post through the prescribed format along with other necessary documents on or before 01 October 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia