என்ஐடி, ஐஐஐடி காலியிடங்களைநிரப்ப ஆகஸ்ட் 17 வரை காலக்கெடு

Posted By:

சென்னை: என்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளின் காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 17 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

என்ஐடி, ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 5,550 காலியிடங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் நிரம்பாத நிலையிலுள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவை மத்திய இடஒதுக்கீடு வாரியம்(சிஎஸ்ஏபி) நீட்டித்துள்ளது.

என்ஐடி, ஐஐஐடி காலியிடங்களைநிரப்ப ஆகஸ்ட் 17 வரை காலக்கெடு

இதன்மூலம் திறமையுள்ள மாணவர்கள் என்ஐடி, ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சிஎஸ்ஏபி வட்டாரங்கள் கூறியதாவது:

காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், இந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மொத்தம் 5,550 இடங்கள் காலியாகவுள்ளன.

என்ஐடி-யில் மட்டும் 3,100 இடங்கள் காலியாகவுள்ளன.

பிரபலமாகாத பல படிப்புகளில் ஏராளமான இடங்கள் காலியாகவுள்ளன. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக வாய்ப்புக் கிடைக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தனl இதுகுறித்து என்ஐடி பாட்னா தலைவரும், சிஎஸ்ஏபி தலைவரும் அசோக் தே கூறியதாவது: பாட்னா என்ஐடி-யில் சேர்வதற்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் பல மாணவர்களுக்கு சேர்க்கை குறித்த விழிப்புணர்வு இல்லை. திறமை அடிப்படையில் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் எந்தப் பிரச்னையும் எழவில்லை என்றார் அவர்.

English summary
The Central Seat Allocation Board (Casablanca) recently extended the deadline for allotment of seats in NIT, IIIT colleges till August 17. About 5,550 vacant seats are left vacant in NITs, IIITs and other government-funded technical institutions (GFTIs). The extension of deadline will provide a fair chance for meritorious students to take admission in an additional special round.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia