சென்னை: ஹமீர்புரிலுள்ள என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள 12 என்ஐடி-களில் ஒன்றுதான் ஹமீர்புர் என்ஐடி ஆகும். 1986-ல் இது நிறுவப்பட்டது. ஹிமாசல் மாநிலத்தின் ஹமீர்புர் மாவட்டத்திலு அனு நகரில் இது அமைந்துள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் இந்தப் படிப்புகள் தொடங்கவுள்ளன. 2 ஆண்டு படிப்பாகும் இது. மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் பிரிவில் இந்த எம்பிஏ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்பு படிப்பதற்கு பொறியியல், டெக்னாலஜி பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். அனுப்பும் விண்ணப்பங்களிலிருந்து சிமேட்-ல் அவர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இதைத் தொடர்ந்து குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் www.nith.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 10 ஆகும்.


Click it and Unblock the Notifications

