டெல்லி என்ஐடி-யில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!!

Posted By:

டெல்லி: டெல்லி என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் அண்ட் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், அப்ளைட் சயின்ஸஸ் (கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மேத்ஸ்) ஆகிய பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகளை இங்கு படிக்கலாம்.

டெல்லி என்ஐடி-யில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!!

இங்கு பிஎச். டி படிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டமேற்படிப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்து முடித்திருக்கவேண்டும்.

மேலும் கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் அல்லது என்இடி சான்றிதழையும் பெற்றிருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.nitdelhi.ac.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும்.

விண்ணப்பக் கட்டணத்தை Director, National Institute of Technology Delhi என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்பவேண்டும்.

நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் ஜூலை 8-ம் தேதி வெளியிடப்படும்.

English summary
Applications are invited by National Institute of Technology (NIT), Delhi for admission to Doctor of Philosophy (Ph.D) programmes. Admissions are offered in the following programmes for the academic year 2016: Electrical & Electronics Engineering Electronics Communication and Engineering Computer Science and Engineering and Applied Sciences (Chemistry, Physics and Mathematics) Eligibility Criteria: Ph.D in Engineering Programme: Candidates must have completed master's degree in Engineering/Technology or equivalent in the relevant area of research.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia