சரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..!

தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளன.

தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளன.

சரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2019ம் ஆண்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். அதில் வரும் தரவரிசைப் பட்டியல் பின்வருமாறு:-

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் :

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் :

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை, மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.

அதில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் இரண்டாம் இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

 

அண்ணா பல்கலை :

அண்ணா பல்கலை :

கடந்த ஆண்டு பத்தாம் இடத்திலிருந்த அண்ணா பல்கலைக் கழகம் இந்த ஆண்டு 14-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21-வது இடத்தையும், திருச்சி என்ஐடி 24-வது இடத்தையும், வேலூர் விஐடி 32- ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 29-ஆம் இடத்திலிருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு 33- ஆம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.

பின்னடைவில் அண்ணா பல்கலை:
 

பின்னடைவில் அண்ணா பல்கலை:

தேசிய அளவிலான பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் அண்ணா பல்கலைக் கழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 4- ஆம் இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம், இம்முறை 7- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுபோல கடந்த முறை 18 -ஆவது இடத்திலிருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு 20- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இப்பட்டியலில், அழகப்பா பல்கலைக்கழகம் 47 வது இடம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 68-வது இடம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் 69-வது இடம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் 86-வது இடம், பெரியார் பல்கலைக் கழகம் 97-வது இடம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் 99-வது இடம் என முதல் 100 பட்டியலில் 21 தமிழக பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

மாநில கல்லூரிகள் :

மாநில கல்லூரிகள் :

தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடம் பிடித்து சாதித்துள்ளது. இந்தக் கல்லூரி கடந்த ஆண்டு 5-ஆம் இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில், லயோலா கல்லூரி 6-வது இடம், எம்.சி.சி 13-வது இடம் என மொத்தம் 35 தமிழகக் கல்லூரிகள் முதல் 100 தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் கோவை அரசுக் கல்லூரி 33- ஆம் இடத்தையும், சென்னை ராணி மேரி கல்லூரி 40- ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

பொறியியல் கல்லூரிகள் :

பொறியியல் கல்லூரிகள் :

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த முறை 8- ஆவது இடத்திலிருந்த அண்ணா பல்கலைக் கழகம் இந்த ஆண்டு 9- ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRF India Rankings 2019 declared: IIT Madras excels in Overall category, check entire list here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X