ஹைதராபாத் என்ஐஎன் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை!!

Posted By:

சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (என்ஐஎன்) இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

ஹைதராபாத் என்ஐஎன் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை!!

சீனியர் ரிசர்ச் பெல்லோ பிரிவில் மொத்தம் 6 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவியல் பிரிவில் பட்டமேல்படிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் ஆராய்ச்சித் துறையில் 2 வருட அனுபவம் இருக்கவேண்டும். வயடது 35-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்தத் தகுதியுள்ளோர் பிப்ரவரி 10-ம் தேதி Conference Hall, NIN, Tarnaka, Hyderabad என்ற முகவரியில் காலை 9.30-க்கு நடைபெறும் இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://ninindia.org என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டானது மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். பொது சுகாதாரம், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி நடத்தி வருகிறது. ஒஸ்மேனியா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது.

English summary
NIN, Hyderabad invited applications for 06 Senior Research Fellow posts. The eligible candidates can appear for walk-in-interview scheduled to be organized on 10 February 2016. Notification details Advertisement No.: NIN/Pers/Proj-152/2015-16; dtd- 22.01.2016 NIN, Hyderabad Vacancy Details Senior Research Fellow - 06 posts Eligibility Criteria Educational Qualification & Experience: Senior Research Fellow - Post graduate in Basic Science plus two years of Research Experience or Graduate Degree in professional course plus two years of Research Experience.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia