பெங்களூரு நிமான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்க விருப்பமா?

Posted By:

சென்னை: பெங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸஸ்(நிமான்ஸ்) இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிஎச்.டி., டாக்டர் ஆஃப் மெடிசன்(டிஎம்), மாஸ்டர் ஆஃப் சிருஜிக்கல்(எம்.சிஎச்), மாஸ்டர் ஆஃப் பிலாசபி(எம்.பில்), மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் (எம்பிஎச்), எம்.எஸ்சி(சைக்கியாட்ரிக் நர்சிங்) பிரிவுகளில் படிப்புகளை வழங்குகிறது 2016-ல் இந்தப் படிப்புகள் தொடங்கும்.

பெங்களூரு நிமான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்க விருப்பமா?

3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள படிப்பாகும் இது. கூடுதல் விவரங்களுக்கு பெங்களூரு நிமான்ஸ் இன்ஸ்டிடிடயூட் இணையதளமான http://nimhansonline.in-ல் காணலாம். இந்தப் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க இங்கு http://nimhansonline.in/nimhans_jan2016 கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே அனுப்ப முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,000 மட்டும் பெறப்படும்.

ஆன்-லைன் நுழைவுத் தேர்வு, கல்வித் தகுதி அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஜனவரி 31 ஆகும். ஆன்-லைன் நுழைவுத் தேர்வு மார்ச் 26-ல் ந டைபெறும். நேர்முகத் தேர்வு, கவுன்சிலிங் ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும்.

English summary
NIMHANS, (National Institute of Mental Health and Neuro Sciences) Bangalore has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D), Doctor of Medicine (DM), Master of Chirurgical (M.Ch), Master of Philosophy (M.Phil), Masters in Public Health (MPH) and Master of Science (M.Sc) in Psychiatric Nursing. Admissions are offered for the commencing session 2016. PG Medical programmes are offered in various specialisations. Ph.D and M.Ch programmes will be offered between 3 - 5 years. For more details on eligibilty criteria visit the official website

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia