வாழ்வை வளமாக்கும் பேங்க்கிங் சேல்ஸ், மார்க்கெட்டிங் பிரிவில் சான்றிதழ் படிப்புகள்!!

Posted By:

சென்னை: பேங்க்கிங் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்(CPBSM) பிரிவில் சான்றிதழ் படிப்புகளை என்ஐஐடி இன்ஸ்டிடியூட் ஃபார் பைனான்ஸ், பேங்க்கிங் அண்ட் இன்சூரன்ஸ்(ஐஎஃப்பிஐ) அறிமுகம் செய்துள்ளது.

நாட்டிலேயே வங்கி பயிற்சி அளிக்கும் ஒரே இன்ஸ்டிடியூட் என்ஐஐடி இன்ஸ்டிடியூட் ஃபார் பைனான்ஸ், பேங்க்கிங் அண்ட் இன்சூரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் சேரும் புரோபேஷனரி அதிகாரிகளுக்கு மார்க்கெட்டிங் திறமைகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த சான்றிதழ் படிப்பை இன்ஸ்டிடியூட் வழங்குகிறது. இதற்காக கத்தோலிக் சிரியன் வங்கியுடன் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாழ்வை வளமாக்கும் பேங்க்கிங் சேல்ஸ், மார்க்கெட்டிங் பிரிவில் சான்றிதழ் படிப்புகள்!!

இந்த சான்றிதழ் படிப்பில் மார்க்கெட்டிங், சேல்ஸ், டெக்னாலஜி, வாடிக்கையாளர்களை கையாளுதல் உள்ளிட் பயிற்சிகள் அளிக்க்படும்.

இந்தப் பயிற்சி கேரள மாநிலம் திருச்சூர், திருவனந்தபுரம், தமிழகத்தில் கோவை நகரங்களில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் ஒரு மாதமாகும்.

இந்தப் படிப்புகள் வங்கிக்கு வரும் இளம் தலைமுறையினரின் வாழ்வை வளமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
NIIT Institute for Finance, Banking and Insurance (IFBI), India's largest banking training institute, has launched a certificate programme in banking sales and marketing (CPBSM) in association with Catholic Syrian Bank (CSB).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia