என்ஐஎஃப்டி-யில் பிஎச்.டி. படிப்பு படிக்க ஆசையா...!!

Posted By:

டெல்லி: டெல்லியிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் (என்ஐஎஃப்டி) டிசைன் பிரிவில் பிஎச்.டி. படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

என்ஐஎஃப்டி-யில் பிஎச்.டி. படிப்பு படிக்க ஆசையா...!!

இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் டிசைன் பிரிவில் பி.ஜி. பட்டமேற்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.nift.ac.in/delhi/ என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

மேற்கண்ட இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட்-அவுட் எடுத்து Director (Admissions) National Institute of Fashion Technology, NIFT Campus, Hauz Khas, New Delhi -110016 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 அனுப்பவேண்டும். இந்தத் தொகையை NIFT, New Delhi என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்புதல் நலம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18 ஆகும். நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 29 ஆகும். மே 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

English summary
Applications have been invited by the National Institute of Fashion Technology (NIFT), New Delhi for the admissions to Doctor of Philosophy (Ph.D) in Design, Management and Technology for the academic session 2016. Candidates who are interested should have to apply on or before April 18. Eligibility Criteria: Candidates must have completed a post graduation degree in Design, Management or Technology from a recognised university/ institute. For more details on eligibility criteria, visit the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia