தேசிய ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் வேலை இருக்கு!

Posted By:

சென்னை: தேசிய ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில்(NIFT) பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன.

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் 1986-ல் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் வரும் நிறுவனமாகும். ஜவுளித்துறையில் படிப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 2006-ம் ஆண்டு சட்டரீதியான அந்தஸ்தை இது பெற்றது.

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் வேலை இருக்கு!

மும்பை, கொல்கத்தா, காங்ரா, காந்திநகர், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, ரேபரேலி, பாட்னா, ஷில்லாங், போபால், கண்ணூர், புவனேஸ்வர், ஜோத்பூர் நகரில் என்ஐஎஃப்டி மையங்கள் உள்ளன. 4 ஆண்டு பட்டப்படிப்பு, 2 ஆண்டு மாஸ்டர் பட்டப் படிப்புகளை டிசைன், நிர்வாகம், டெக்னாலஜி துறையில் வழங்கி வருகிறது என்ஐஎஃப்டி.

புராஜக்ட் என்ஜினீயர், துணை இயக்குநர், இயக்குநர், வளாக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம், The Registrar, NIFT Head Office, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi- 110016 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

English summary
National Institute of Fashion Technology (NIFT) invited applications for the posts of Director (Finance & Accounts), Project Engineer, Campus Director and Deputy Director (Finance & Accounts) on deputation basis. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 08 January 2016. Important Date: Last Date to Apply: 08 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia