என்ஐஇஎல்ஐடி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை

Posted By:

சென்னை: டெல்லியிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜியில்(என்ஐஇஎல்ஐடி) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வரும் ஜனவரி 2016-ம் ஆண்டு 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

என்ஐஇஎல்ஐடி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை

துணை இயக்குநர்(சட்டம்), உதவி இயக்குநர்கள் (நிதி, நிர்வாகம் உள்ளிட்டவை), நிதி அலுவலர், நிர்வாக அதிகாரி, மூத்த உதவியாளர், நூலக உதவியாளர், அலுவலக முன்னறை ஆலோசகர், இளநிலை உதவியாளர், விஞ்ஞானி என பல பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் விவரங்களை என்ஐஇஎல்ஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.nielit.gov.in-ல் காணலாம்.

தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை 2016-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia